Just In

தமிழகத்தில் இந்தாண்டு 7 இடங்களில் அகழாய்வு நடைபெறும் என தொல்லியல் துறை அறிவிப்பு

தமிழகத்தில் 7 இடங்களில் இந்தாண்டு அகழாய்வு பணிகள் நடைபெறயுள்ளதாக தொல்லியல் துறை அறிவிப்பு.

சென்னை:-

தமிழகத்தில் இந்தாண்டு 7 இடங்களில் அகழாய்வு நடைபெறும் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. 

இதன்படி, கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, கொடுமணல் உள்ளிட்ட 7 இடங்களில் அகழாய்வு நடைபெற உள்ளது. மேலும், மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரத்திலும் அகழாய்வு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள சிவகளை பகுதியில் தொல்லியல் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட இடங்களில் அகழாய்வு செய்ய வேண்டும் என தொல்லியல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

ஆதிச்சநல்லூர், சிவகளை உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளில் அகழாய்வு பணிகள் நடைபெறும் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கடந்த ஆண்டு தெரிவித்தது குறிப்பிடதக்கது.




Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
25-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee