தமிழ்நாடு

காவல்துறை, சீருடை அலுவலகர்களுக்கு பொங்கல் பதக்கம் அறிவிப்பு!!

3,186 காவல்துறை, சீருடை அலுவலகர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழக காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறைத்துறைகளில் பணியாற்றுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் பொங்கல் தினத்தன்று பொங்கல் பதக்கங்கள் வழங்கப்படுகிறது. 

அந்த வகையில், இந்த ஆண்டு 3,000க்கும் மேற்பட்ட காவல், சீருடை பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்கப்படும் என்றும் பிப்ரவரி 1ம் தேதி முதல் மாதாந்திர பதக்கப்படி ரூ.400 வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. 

காவல் வானொலி பிரிவு, நாய் படைப் பிரிவு உள்ளிட்டவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் 3,186 காவல்துறை, சீருடை அலுவலகர்களுக்கு பொங்கல் பதக்கம் வழங்கவும் மாதாந்திர பதக்கப்படி ரூ.400 வழங்கவும் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

பதக்கங்களுக்கு தேர்வாகியிருக்கும் 3,186ல் 6 பேருக்கு முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்பு பணிப் புத்தகம் வழங்கப்பட உள்ளதாகவும் பின்னர் நடக்கும் நிகழ்ச்சியில் பதக்கம் மற்றும் முதல்வரின் கையொப்பத்துடன் கூடிய பதக்கச்சுருள் வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
23-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee