இந்தியா

அங்கன்வாடி மையங்களை திறப்பது எப்போது? -மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கெடு

அங்கன்வாடி மையங்களைத் திறப்பது குறித்து வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் முடிவெடுக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவு.

புதுடெல்லி:-

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட அங்கன்வாடிகளை திறக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களைத் தவிர நாடு முழுவதும் அங்கன்வாடி மையங்களைத் திறப்பது குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மேலும், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவை, மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. 


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee