தமிழ்நாடு

பொங்கல் வைக்க உகந்த நேரம் எது???

பொங்கல் பண்டிகை நாளை (14-ம் தேதி), நாளை மறுநாள் (15-ம் தேதி) மாட்டுப் பொங்கலும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பொங்கல் வைக்க உகந்த நேரத்தை காணலாம்.

சென்னை:-

பொங்கல் பண்டிகை நாளை 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது, அதேபோல் நாளை மறுநாள் 15-ம் தேதி மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் பொங்கல் வைக்க உகந்த நேரம் வருமாறு:-

நாளை 14-ம் தேதி காலை 8 மணி முதல் 10 மணி வரையும், 11.35 மணி முதல் 1.30 மணி வரையும் பொங்கல் வைக்க உகந்த நேரம்.

அதேபோல் 15-ம் தேதி மாட்டுப் பொங்கல் அன்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள் பொங்கல் பானை வைத்து படைக்க உகந்த நேரம் ஆகும்.
இல்லையெனில், நாளை (14-ந் தேதி) காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் அடுப்புகள் தயார் செய்து காலை 11.05 மணிக்கு மேல் பொங்கல் வைத்து பகல் 1.30 மணிக்குள் பூஜை செய்து உண்ண உகந்தமான நேரம் ஆகும்.

15-ந் தேதி மாட்டுப் பொங்கல் அன்று காலை 9 மணிக்குள் மாட்டுத்தொட்டி கட்டி பகல் 12 மணிக்கு மேல் 3 மணிக்குள் மாடுகளை குளிப்பாட்டி மாலை 4.30 மணிக்கு மேல் மாட்டுப் பொங்கல் வைத்து மாலை 6 மணி முதல் இரவு முழுவதும் மாட்டுப் பொங்கலிட்டு பூஜை செய்து மாடுகள் விட உகந்த நேரம் ஆகும்.


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
23-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee