பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. நாளை மறுநாள் 15-ந் தேதி மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் எப்போது வைக்கலாம் என்று பலருக்கும் கேள்வி எழும்.
நாளை காலை 8 மணி முதல் 10 மணி வரையும், 11.35 மணி முதல் 1.30 மணி வரையும் பொங்கல் பானை வைத்து பொங்கல் வைக்க உகந்த நேரம்.
மாட்டுப்பொங்கல் தினத்தன்று காலை 9 முதல் 10.30க்குள் பொங்கல் வைத்து வழிபட வேண்டும். காணும் பொங்கலன்று காலை 7.30 முதல் 9 மணிக்குள் அல்லது காலை 10.30 முதல் 12 மணிக்குள் பொங்கல் வைத்து வழிபடலாம்.
கொரோனா கட்டுப்பாடு காரணமாகக் காணும் பொங்கல் அன்று சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும்.
கடற்கரைகள், பொழுதுபோக்கு பூங்காக்களுக்குச் செல்ல வேண்டாம் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது. எனவே, சுற்றுலா தளங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். வெளியே செல்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்வது நல்லது