லைப் ஸ்டைல்

காபி குடிப்பதால் பெண்களுக்கு உண்டாகும் சரும பிரச்சனைகள்???

அனைவரும் விரும்பும் காபி குடிப்பதால் என்ன சரும பிரச்சனைகள் எல்லாம் பெண்களுக்கு உண்டாகிறது என்பதை காணலாம்.

காபினால் முகம் பாதிக்கப்படுமா??என்று அனைவரின் மனதில் குழப்பம் இருக்கும். ஏனெனில், ஒவ்வொருவருக்குமே காலை எழுந்ததும், காபி குடிக்கும் பழக்கம் நிச்சயம் இருக்கும்.

Coffee and Cancer: What the Research Really Shows | American Cancer Society

ஆனால், காபி குடிப்பதால் சரும பிரச்சனைகள் உண்டாகிறது, ஆமாங்க அதிக காபி குடித்தால் முகத்தில் பருக்கள் வரும். பெரும்பாலும் ஹார்மோன் சமநிலையில் இல்லையென்றால் முகப்பரு உண்டாகும். இதனை சரி செய்ய அதிக காய்கறிகள், பழங்கள் உண்டாகவேண்டும். 

அப்பொழுது தான் தெளிவான சருமம் கிடைக்கும். தினமும் குடிக்கும் காபியின் அளவை குறைத்து கொள்ளுங்கள். காபியில் உள்ள வேதி பொருள்கள் மன அழுத்தம் ஏற்படுகின்ற ஹார்மோனை அதிகமாக தூண்டிவிடுவதால் சருமத்தில் முகப்பரு உண்டாகிறது. தோல்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அதிக தண்ணீரை குடிக்க வேண்டும். 

காபியை அதிகமாக குடித்தால் அடிக்கடி சிறுநீர் கழிப்போம். இதனால் உடம்பில் உள்ள முழு தண்ணீரும் வெளியேறிவிடும். இதனால் முகப்பரு உண்டாகிறது. எனவே காபி தான் என்று அலட்சியமாய் இல்லாமல் பிடித்த காபியை அளவோடு பருகுங்கள்.

அதேசமயம், காபியில் பாலிபினால்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற ஏராளமான விஷயங்கள் உள்ளன. இவை நமக்கு உற்சாகத்தை தருவதோடு நம் சரும ஆரோக்கியத்திற்கும் சிறந்தது என்கிறார்கள் சரும மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee