தமிழ்நாடு

சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு..!!

தொடர் மழையால் காட்டாற்று ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது

மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரியில் சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. மார்கழி அமாவாசையையொட்டி கடந்த 10ம் தேதி முதல் நாளை கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 

நேற்று அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் தாணிப்பாறையில் குவிந்தனர். காலை 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். காலை 8 மணிக்கு மழை பெய்ததால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 

இதன்பின் தொடர்ந்து மழை பெய்ததால் கோயிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் 1 மணிநேரத்திற்கும் மேலாக காத்திருந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee