சினிமா

ராசிமான்-சீமான்- துக்ளக் தர்பாருடன் மோதும் தம்பிகள்!!!

விஜய்சேதுபதி – பார்த்திபன் இணைந்து நடித்திருக்கும் ‘துக்ளக் தர்பார்’ படத்தின் டீசர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை:-

இலங்கை தமிழர்களுக்கு எதிரானவர் முத்தையா முரளிதரன் என்றும், அவரது வாழ்க்கை வரலாற்று படமான ‘800’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று எதிர்த்தவர்களில் முக்கியமானவர்களானா நாம் தமிழர் கட்சியினர் தற்போது துக்ளக் தர்பாருக்கு எதிராக கொந்தளித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'துக்ளக் தர்பார்'. இதில் 'நானும் ரவுடிதான்' படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி, பார்த்திபன் இணைந்துள்ளனர். இவர்களுடன் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ், பிக்பாஸ் சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். முழுக்க அரசியல் பின்னணி கொண்ட களமாக இத்திரைப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் பார்த்திபன் பெயர் சீமான் என்பதற்கு பதிலாக ராசிமான் என்றும், அவரது கட்சி 'மக்கள் முற்போக்கு முன்னேற்ற கழகம்' என்று இருக்கிறது. மேலும், புலி இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும் என்ற கேப்சன் வேறு போட்டிருக்கிறார்கள். ராசிமான் போஸ்டர்களை கிழித்து எறிவது மாதிரி காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

விஜய்சேதுபதி படத்திற்கு சீமான் கட்சியினர் திடீர் எதிர்ப்பு: இதுதான் காரணமா?  - தமிழ் News - IndiaGlitz.com


இதனால் இது, சீமான் போஸ்டர்களை கிழித்து எறிவதாக நினைத்து, நாம் தமிழர் தம்பிகள் புண்படுத்திட்டான் புண்படுத்திட்டான் என்று கொந்தளிக்கிறார்கள். மேலும், ராசிமானை(பார்த்திபன்) பார்த்து, ‘’எப்டினாலும் நீங்க என்னை சும்மா விடப்போறதில்ல, அதனால நானும் உங்கள சும்மா விடறாத இல்ல, வாங்களேன் நேரடியாவே மோதிப்பார்ப்போம்..’’ என்று சவால் விடுகிறார் விஜய்சேதுபதி. 

                                            Courtesy


இதனால் சீமானுக்கு விஜய் சேதுபதி சவால் விடுவதாகவே நினைத்துக்கொண்டு, கலையை கலையாக மட்டுமே காணவேண்டும் என வசனம் பேசும் அறிவுசார்ந்த நாம் தமிழர் தம்பிகள் துக்ளக் தர்பாரை தீவிரமாக எதிர்த்து வருகின்றனர்.

இதனிடையே, பார்த்திபன், விஜய் சேதுபதியை எதிர்க்கும் நாம் தமிழர் தம்பிகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee