சினிமா

ரஜினி, விஜய்… அடுத்து யாருக்கு வில்லனாக போகிறார் விஜய் சேதுபதி?

ரஜினி காந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ’பேட்ட’...இப்படத்தின் மற்றோரு ஸ்பெஷல் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்தது.


வழக்கமாக சினிமாவில் நடிக்க ஆரம்பிக்கும்போது வில்லனாக அறிமுகமாகி, பின் ஹீரோவாக மாறி விடுவர். அதன்பின் வில்லனாக நடிப்பதற்குத் தயங்குவர். ரஜினி, சத்யராஜ், சரத்குமார் போன்றோர்களை உதாரணமாகச் சொல்லலாம்.

ஆனால், விஜய் சேதுபதி கதாநாயகனாகத்தான் அறிமுகமானார். நடிக்க வந்தும் பத்தாண்டுகள்தாம் ஆகின்றன. அதற்குள் பல விதமான கேரக்டர்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். 

முடி நரைந்த காமெடி ரவுடியாக சூது கவ்வும் படத்தில், சூப்பர் டீலக்ஸில் திருநங்கையாக, ஆரஞ்சு மிட்டாயில் வயதான பெரியவராக என நடிப்பின் பல பரிணாமங்களைக் கொண்டு வர முயல்கிறார்.

 
அதேநேரம் நானும் ரவுடிதான், சேதுபதி, ஜூங்கா, றெக்க மாதிரியான படங்கள் மாஸ் ஹீரோவாக வலம் வருகிறார். இந்நிலையில் பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்தார். எவ்வித தயக்கமுமின்றி வில்லனாக நடித்ததும் பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. ரஜினியுடன் சேர்ந்து நடிக்கும் ஆவலில் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என நினைத்தார்கள்

ஆனால், மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லன் விஜய் சேதுபதிதான் என்றபோது பலரின் புருவங்கள் வியப்பில் உயர்ந்தன. விஜய் சேதுபதி இப்படியே நடித்தால் அவரின் கரியர் அவ்வளவுதான் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் மாஸ்டர் படம் வெளியானதும் விஜய்க்கு இணையாக விஜய் சேதுபதி கேரக்டரும் புகழ்ந்து பேசப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் விஜய் கேரக்டரை விடவும் விஜய்சேதுபதி பாத்திரம் பலரால் நேசிக்கப்படுகிறது.

இந்நிலையில் ரஜினி, விஜய்க்கு அடுத்து விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அநேகமாக அது அஜித்தாக இருக்கக்கூடும் என்ற பேச்சு அடிபடுகிறது. அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இது முடிந்ததும் சிவா அல்லது மீண்டும் வினோத் படத்தில் அஜித் நடிக்க திட்டமிட்டிருப்பதாகவும் இதில் வில்லன் விஜய் சேதுபதியை அணுகுவதாகத் தெரிகிறது.

அடுத்து அஜித்துடன் மோத விரும்புக்கிறாரா விஜய் சேதுபதி?

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
06-Mar-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee