உலகப்புகழ் பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை வெகு விமர்சியாக கோலாகலமாக நடைபெற உள்ளது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் பெருமக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இதற்கான முன்னேற்பாடுகள் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது
முன்னேற்பாடுகள் பணியினை திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இதில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் வருவாய் கோட்டாட்சியர் முருகானந்தம், வாடிப்பட்டி வட்டாட்சியர் பழனி குமார் பொதுப்பணித்துறை கோட்டசெயற்பொறியாளர் (கட்டிடம்) சுகுமாரன் அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்