இந்தியா

மக்கள் பிரதிநிதிகள் அளிக்கும் ஆதரவு காரணமாக அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர்.

பொங்கலை முன்னிட்டு ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் விறுவிறுப்பாக சேவல் சண்டை. சட்டம், தடை ஆகியவற்றை புறம்தள்ளி சேவல் சண்டை நடத்தப்படுகிறது.

ஆந்திராவில் சேவல் சண்டை நடத்த தடை அமலில் உள்ளது.
ஆனால் ஆந்திர மாநில கடலோர மாவட்டங்களான கோதாவரி மாவட்டங்கள், கிருஷ்ணா, குண்டூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு சேவல் சண்டை சம்பிரதாய விளையாட்டு. எனவே
ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தி, பொங்கல் ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் சேவல் சண்டைகள் ஜோராக நடைபெறுவது வழக்கம்.
சேவலுக்கு காலில் கத்திகளை கட்டியும், லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை பந்தயமாக  வைத்தும் பொங்கல் சமயத்தில் கடலோர மாவட்டங்களில் சேவல் சண்டை நடைபெறும்.

சேவல் சண்டை நடத்த சட்டப்படி தடை அமலில் உள்ளது.
ஆனால் மக்கள் பிரதிநிதிகள் சேவல் சண்டை நடத்தும் நபர்களுக்கு அளிக்கும் ஆதரவு காரணமாக அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். எனவே பிரம்மாண்டமான அளவில் பந்தல் போட்டு, விரிவான விளம்பரம் செய்து சேவல் சண்டை நடத்தப்படுகிறது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
04-Mar-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee