Just In

கொரோனா தடுப்பூசியை நானும் போட்டுக்கொள்வேன் – முதல்வர் பழனிசாமி

மக்கள் அனைவரும் தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் பழனிசாமி பேசினார். அப்போது மக்கள் மத்தியில் தொடக்கத்தில் தடுப்பூசிக்கு அச்சம் இருந்தாலும் பின்னர் அது நீங்கும். உரிய பரிசோதனைகளுக்கு பிறகு தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் முயற்சியால் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இது பிரதமர் மோடி எடுத்த விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி. தமிழகத்தில் 226 இடங்களில் ஒத்திகை செய்து 166 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. முதலில் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றார்.

 தமிழகத்தில் 166 மையங்களில் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோ-வின் செயலில் பதிவு செய்த 4.30 லட்சம் பேரில் முதற்கட்டமாக 2.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசியை நானும் போட்டுக்கொள்வேன்  என்றார்.


தமிழகத்தில் முதல் கொரோனா தடுப்பூசி மருத்துவர் செந்திலுக்கும், இரண்டாவது ஊசி IMA தேசிய தலைவர் ஜெயலாலுக்கும், 3வது தடுப்பூசி தூய்மைப்பணியாளர் முத்துமாரிகும் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
04-Mar-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee