உலகம்

அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடன் 20-ம் தேதி பதவியேற்பு

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் 20-ம் தேதி பதவியேற்பதையொட்டி வெள்ளை மாளிகை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இவர் அமெரிக்க அதிபராக வரும் 20-ம் தேதி பதவியேற்க உள்ளார். இதற்கிடையே கடந்த 6-ந் தேதி ஜோபைடனின் வெற்றியை உறுதி செய்து சான்றிதழ் அளிப்பதற்காக அமெரிக்க பாராளுமன்றம் கூடியது. அப்போது டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்துக்குள் நுழைந்து பெரும் வன்முறையில் ஈடுபட்டனர்.

இந்த கலவரத்துக்கு டிரம்ப் காரணம் என்றும் அவர் தனது ஆதரவாளர்களை தூண்டியதாகவும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரத்தில் இணையதள பக்கங்களில் வெளியான தேர்தல் முடிவுகள் தொடர்பான அரசியல் ரீதியிலான விளம்பரங்கள் வன்முறைக்கு ஒரு காரணமாக இருந்தது.

இந்த நிலையில், தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக பல கருத்துக்கள் சமூகவலைதளம் மூலம் பரவியது. இந்த விளம்பரங்கள் வன்முறை ஏற்பட காரணமாகவும் அமைந்தன. இந்நிலையில், ஜோ பைடன் வரும் 20-ம் தேதி பதவியேற்க உள்ள நிலையில், தங்கள் இணையதள பக்கங்களில் அரசியல் ரீதியிலான விளம்பரங்களை வெளியிட கூகுள் நிறுவனம் தற்காலிக தடை விதித்துள்ளது. இதனையடுத்து, அசம்பாவிதங்களை தவிர்க்க வெள்ளை மாளிகை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
04-Mar-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee