தமிழ்நாடு

கூட்டம் கூட தடை பொது மக்கள் செய்து செயல் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காணும் பொங்கல் தினத்தில் சுற்றுலா தலமான தரங்கம்பாடியில் பொதுமக்கள் கூடுவதற்குத் தடை. போலீஸ் அனுமதி அளிக்காததால் வெறிச்சோடிய டேனிஷ் கோட்டை கடற்கரை பகுதி, மற்றொரு பகுதியில் கூடிய பொதுமக்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் காணும் பொங்கல் தினத்தில் புகழ்பெற்ற தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் வழக்கமாக ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் கூடுவர். இந்த ஆண்டு கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கடற்கரை பகுதிகள், பூங்காக்கள் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பண்டிகை தினங்களில் கூடுவதற்கு தமிழக அரசு தடை விதித்தது. காணும் பொங்கல் பண்டிகை தினத்தில்  கடற்கரை பகுதிகளில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. காணும் பொங்கலில் டேனிஷ் கோட்டை கடற்கரை பகுதிக்கு ஏராளமான வாகனங்களில் வந்த சுற்றுலா பயணிகளை போலீசார் திருப்பி அனுப்பினர். பொறையார் போலீசார் தரங்கம்பாடி கடற்கரை நோக்கி செல்லும் சாலை மற்றும் கடற்கரையில் பல இடங்களில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் தரங்கம்பாடி கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் துறைமுகம் பகுதியில் கூடினர். போலீசார் எச்சரிக்கையை மீறி கூட்டம் கூடியது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
04-Mar-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee