நாகையில் சிறுமியை மிரட்டி ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது ;
நாகை அடுத்துள்ள நாகூர் புதுமனை தெருவில் வசித்து வருபவர் கைதுருஸ் மாலிம் என்பவரது மகன் கலிபா இஸ்தியாக் மாலிம்.
இவர் நாகூர் வண்ணான் குளம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு 9 ஆம் வகுப்பு படித்த நாள்முதல் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. திருமணம் செய்து கொள்வதாக கூறி, அடிக்கடி அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த நிலையில், சிறுமி ஒரு கட்டத்தில் திருமணம் செய்துக்கொள்ளும்படி கூறவே அதற்கு கலிபா இஸ்தியாக் மாலிம் எதிர்ப்பு தெரிவித்து சிறுமியை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே சிறுமி நடந்ததை தனது பெற்றோரிடம் கூறவே, பெற்றோர்கள் சம்மந்தப்பட்ட இளைஞர் மீது நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
புகாரை விசாரித்த நாகை அனைத்து மகளிர் காவல் நிலைய போலிசார் நாகூர் பகுதியை சேர்ந்த கலிபா இஸ்தியாக் மாலிமை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.