சினிமா

இவர் தான் பிக் பாஸ்4 டைட்டில் வின்னரா? பல லட்ச வாக்குகள் முன்னிலை

16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் அடுத்தடுத்து இரண்டு போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியாக இரண்டு பேர் பங்கேற்றனர்.

முதல் வாரம் மட்டும் நாமினேஷன் இல்லாமல் சென்ற இந்நிகழ்ச்சியில் அடுத்தடுத்த வாரங்களில் ஒவ்வொரு போட்டியாளராக வெளியேற்றப்பட்டனர்.
ஒரே ஒரு வாரம் மட்டும் டபுள் எவிக்ஷன் நடைபெற்று இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களில் பலர், கேமரா கான்ஷியஸுடன் இருந்ததால் நடிக்கிறார்கள் என்ற விமர்சனத்துக்கும் ஆளானார்கள்.

சண்டை சச்சரவுகள் சர்ச்சைகள் என எதற்கும் பஞ்சமில்லாமல் இத்தனை நாட்களை கடந்தது பிக்பாஸ் நிகழ்ச்சி. தனித்துவமாக விளையாடிய சில போட்டியாளர்களும் எதிர்பாராத விதமாக நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டனர். 

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆரி, ரியோ, பாலாஜி, சோம், ரம்யா ஆகிய 5 பேர் ஃபைனலிஸ்ட்டாக பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ளனர். இன்று வெகு விமர்சையாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நடைபெறவுள்ளது.

இதற்காக ஃபினாலே வாரமான இந்த வாரத்தில் எவிக்ட்டான பழைய போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் அழைத்து வரப்பட்டனர். இதனால் ஆட்டம் பாட்டம் என களைக்கட்டியது பிக்பாஸ் வீடு. கடந்த எபிசோடில் உருக்கமாக பேசி மொத்த பேருக்கும் பிரியாவிடை கொடுத்தார் பிக்பாஸ்.

ரசிகர்களும் தங்களுக்கு பிடித்தமான போட்டியாளர் வெற்றி பெற வேண்டும் என வாக்குகளை அள்ளிக் கொட்டினர். நேற்று இரவுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் யார் அதிக வாக்குகளை பெற்று டாப்பில் உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி ஆரி அர்ஜூனன் தான் அதிக வாக்குகளை பெற்று டாப்பில் உள்ளார் என்று தெரியவந்துள்ளது. தனக்கு அடுத்த நிலையில் உள்ள போட்டியாளரை விட பல லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதனை அடுத்து ஆரி தான் டைட்டில் வின்னர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற எவிக்ஷனுக்கான நாமினேஷன் புராசஸ்களில் கேப்டனாக இருந்த வாரங்களை காட்டிலும் அதிக முறை நாமினேஷனுக்கு வந்தவர் ஆரிதான்.

ஒவ்வொரு முறையும் அவர் நாமினேஷனுக்கு வரும் போதும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அவரை ரசிகர்கள் முதல் நபராய் காப்பாற்றினர். பிக்பாஸ் சீசன் போட்டியாளர்களிலேயே ரொம்பவே கண்ணியமாகவும் நேர்மையாகவும் விளையாடியவர் ஆரிதான். இதனாலேயே அதிக ரசிகர் பட்டாளத்தை பெற்ற அவர்தான் வின்னர் என்று கூறப்படுகிறது.

அவருக்கு அடுத்தப்படியாக பாலாஜி ரன்னர் அப் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதில் ஒரு டிவிஸ்ட் அரங்கேறியுள்ளது. அதாவது வாக்கு எண்ணிக்கையில் பாலாஜி இரண்டாவது இடத்தை பிடித்து வந்த நிலையில் ரியோதான் ரன்னர் அப் என்றும் கூறப்படுகிறது.
எது உண்மை என்பதை இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.
"ஆரம்பிக்கலங்களா... "

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
04-Mar-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee