லைப் ஸ்டைல்

சர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலாமா?

சர்க்கரை நோய் வந்துவிட்டால் வாழ்க்கையே முடிந்துவிட்டது, இனி வாய்க்கு ருசியான உணவுகள் சாப்பிட முடியாது என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. சர்க்கரை நோய் என்பது நம்முடைய உடலில் குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதாகும்.

சர்க்கரை நோய் வந்துவிட்டால் வாழ்க்கையே முடிந்துவிட்டது, இனி வாய்க்கு ருசியான உணவுகள் சாப்பிட முடியாது என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. சர்க்கரை நோய் என்பது நம்முடைய உடலில் குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதாகும்.

நம்முடைய உடலில் கணையத்தில் இன்சுலின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது நம்முடைய திசுக்கள் குளுக்கோஸை பயன்படுத்த துணை செய்கின்றன. இன்சுலின் போதுமான அளவு சுரக்காதது அல்லது ஆற்றல் குறைவாக இருப்பது ஆகிய காரணத்தால் குளுக்கோஸ் பயன்படுத்த முடியாமல் போகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.


நம்முடைய வாழ்க்கை முறையில் செய்யும் மாற்றங்கள், உடற்பயிற்சி போன்றவற்றால் சர்க்கரை நோய் இருந்தாலும் ஆரோக்கியமாக வாழ முடியும்.

சர்க்கரை நோய் வந்தவர்கள் பழங்கள் சாப்பிடலாமா என்ற கேள்வி எழுகிறது. நிச்சயம் சாப்பிடலாம். மா, பலா, சப்போட்டோ, திராட்சை, அன்னாசி, சீதா, தர்பூசணி போன்ற இனிப்பு சுவை மிக்க பழங்கள் தவிர்த்து ஆப்பிள் உள்ளிட்டவற்றைத் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

என்ன என்ன பழங்கள் சாப்பிடலாம்?

ஆப்பிள்

ஆப்பிள் நார்ச்சத்து நிறைந்தது. எனவே, தாராளமாக ஆப்பிள் பழத்தை எடுத்துக்கொள்ளலாம். இது தவிர ஆப்பிளில் நிறைய ஊட்டச்சத்துக்கள், தாதுஉப்புக்கள் உள்ளன. இவை அனைத்தும் சர்க்கரை நோயாளியின் உடல்நலனை மேம்படுத்த உதவும்.

பேரிக்காய்

பேரிக்காயிலும் ஆரோக்கியமான நார்ச்சத்து நிறைவாக உள்ளது. பேரிக்காயை தினமும் சாப்பிட்டுவருவது டைப் 2 சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆரஞ்சு

ஒரு சிறு ஆரஞ்சு பழத்தில் நம்முடைய உடலுக்குத் தேவையான வைட்டமின் சி-யில் 76 சதவிகிதம் கிடைத்துவிடுகிறது. கார்போஹைட்ரேட்டும் 62 கலோரி அளவுக்குத்தான் உள்ளது. எனவே, இதை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். இது தவிர ஆரஞ்சில் ஃபோலேட், பொட்டாசியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள், தாதுஉப்புக்கள் உள்ளன. இவை ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும்.

மாதுளை

அவ்வப்போது மாதுளை பழத்தை எடுத்துக்கொள்ளலாம். இது சர்க்கரை நோயாளிகளுக்கு இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. மாதுளையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நம்முடைய உடல் கெட்ட கொழுப்பை கிரகிக்கும் திறனை குறைக்கிறது.

கிவி

நம் ஊர் பழம் இல்லை என்றாலும் அதிக ஊட்டச்சத்து மிக்கது. கிவியில் வைட்டமின் சி, பொட்டாசியம், நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. இதை சிறிய அளவில் எடுத்துக்கொள்வதால் எந்த பிரச்னையும் இல்லை.

ஸ்ட்ராபெர்ரி

இது ஊட்டச்சத்து, ஆன்டிஆக்சிடெண்ட், நார்ச்சத்து நிறைந்த பழம். இதை சாலட்டில் சேர்த்துச் சாப்பிடலாம். ஓட்ஸ் கஞ்சியில் இதை சுவைக்காக சேர்த்துக்கொள்ளலாம்.

அவகேடோ

பட்டர் ஃப்ரூட் என்று சொல்வார்கள். அவகேடோவில் ஒரு கிராம் அளவுக்கு தான் சர்க்கரை (கார்போஹைட்ரேட் உள்ளது). இதில் அதிக ஆரோக்கிய கொழுப்புச் சத்து உள்ளது. எனவே, சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்று பயம் இன்றி இதை எடுத்துக்கொள்ளலாம். அவகேடோ பழத்தை எடுத்து வந்தால் அது இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் பிரச்னைக்கு நல்ல தீர்வு அளிக்கும்.


பழங்களை கடித்து சாப்பிட வேண்டும். சாறு பழிந்து அருந்த கூடாது.

இங்கு சொல்லப்பட்டுள்ள பழங்கள் எல்லாம் பொதுவான பரிந்துரை மட்டுமே.

அவரவர் உடல்நிலை, நோயின் காலம், தீவிரம் ஆகியவற்றைப் பொருத்து அவரவருக்கான உணவு முறைகள் மாறுபடும்.

எனவே, உங்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று தேவை எனில் வாழ்வியல் மாற்றங்களை மேற்கொண்டு பிறகு இவற்றை எடுத்துக்கொள்வது நல்லது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
04-Mar-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee