இந்தியா

தான் உயிருக்கு உயிராக விளையாடிய விளையாட்டில் உயிரை விட்ட எம்.காம்.பட்டதாரி.

விளையாட்டு விபரீதமாகும் என்ற வாக்கியத்திற்கேற்ப நடந்த இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள கங்கன்ன பள்ளியில் இன்று மாவட்ட அளவில் ஆன கபடி போட்டி நடைபெற்றது. 

போட்டியில் அதே பகுதியை சேர்ந்த எம்.கம்
பட்டதாரி நரேந்திராவும் தன்னுடைய அணியினருடன் கலந்து கொண்டு விளையாடினார்.

அப்போது கபடி ஆடிய அவரை மடக்கி பிடித்த எதிரணியினர் அவர் மேல் விழுந்தனர். சற்றுநேரத்தில் அவரிடமிருந்து வந்த கபடி, கபடி என்ற சத்தம் நின்று போனது. 

அப்போது அங்கிருந்து எழுந்து நரேந்திரா சுமார் இரண்டடி தூரம் நடந்து மயங்கி சரிந்து விழுந்து மரணம் அடைந்தார்.

அவரை அங்கிருந்து அதிகாரிகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நரேந்திரா உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
06-Mar-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee