கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி சுங்கச்சாவடி அமைந்துள்ளது, இந்த சுங்கச்சாவடியில் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து சென்று வருகிறது இந்நிலையில் பொங்கல் விடுமுறையொட்டி தங்கள் ஊர்களுக்கு செல்ல வாகனங்கள் மூலமும் தென்மாவட்டங்களில் சென்றுள்ளனர். பொங்கல் விடுமுறை இன்றுடன் முடிவு முடிவடைந்த நிலையில் நாளை அலுவலக பணிக்காக திருச்சி சேலம் கோயம்புத்தூர் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்ல கார் வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் வருகின்றன.
தேசிய நெடுஞ்சாலை மையப்பகுதியான உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடியில் இன்று மாலை அதிகளவு வந்த வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக 6 கவுண்டர்கள் திறக்கப்பட்ட இருந்த நிலையில் கூடுதலாக இரண்டு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து நெரிசல் சரி செய்யப்படுகிறது மேலும் சுங்க சாவடியை வாகனங்கள் கடந்து செல்ல சுமார் 30 நிமிடங்கள் மேலாகிறது என்று ஓட்டுநர்கள் தெரிவிகின்றனர்..