அரசியல்

ஜெயலலிதாவிற்கே அநியாயம் நிகழ்ந்தது, திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்

சென்னை அசோக் நகரில் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி கே பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,
எம்ஜிஆர் தெய்வத்திற்கு சமமானவர் என்றும் தற்போது கட்சி தொடங்குபவர்கள் கூட எம்ஜிஆர் பெயரை சொன்னால் தான் கட்சியை தொடங்க முடியும் என்றும் கூறினார்.

மேலும் மற்ற கட்சிகள் அனைத்தும் குடும்ப வாரிசுகளை வளர்த்தது ஆனால் எம்ஜிஆர் ஜெயலலிதா  தொண்டர்களை வாரிசுகளாக வளர்த்தனர். திமுகவில் குடும்ப ஆட்சியால் வாரிசு அரசியலால் அரசியலுக்கு வந்தார்கள் ஆனால் நாங்கள் அப்படி அல்ல என்றும் திமுக ஒரு குடும்ப கட்சி அது ஒரு கார்ப்பரேட் நிறுவனம் என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

மேலும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் அறிவித்த பல திட்டங்களை தற்போது நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதாகவும் ஆனால் எதுவுமே தெரியாததுபோல் ஸ்டாலின் இந்த அரசு எதையும் செய்யவில்லை என பொய்யாக பரப்புரை செய்து வருகிறார் எனவும் குற்றம் சாட்டினார். கொரோனா பரவலை ஒழுங்காக தமிழக அரசு கையாளவில்லை என குற்றம்சாட்டினார் பிற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் கொரோனா கட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் தான் ஆர்டிபிசிஆர் சோதனை அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது என்றும் கொரோனா புயல் மழை வறட்சி என எந்த காலத்திலும் விலைவாசி உயராமல் பார்த்துக் கொண்ட அரசு அதிமுக அரசு தான் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் திமுக நீட் தேர்வை கொண்டு வந்துவிட்டு தற்போது அதனை எதிர்ப்பது வேடிக்கையாக இருப்பதாகவும் தமிழக அரசின் தீவிர முயற்சியால் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மூலம் 313 மாணவர்கள் என்று மருத்துவக்கல்வி பயில அரசு வழிவகை செய்துள்ளதாகவும் பெருமை தெரிவித்தார். 
மேலும் அடுத்த ஆண்டு  இந்த எண்ணிக்கை மேலும் உயரும் எனவும் தெரிவித்தார்.கொரோனா காலத்திலும் ரேஷன் பொருட்கள் தங்கு தடையில்லாமல் வழங்கப்பட்டதாகவும் மேலும் தொடர்ந்து நான்கு மாதங்கள் அம்மா உணவகத்தில் ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

ஊழலைப் பற்றி பேசும் ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாமல் என்னுடன் ஊழலைப் பற்றி நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என சவால் விடுத்தார். திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த பலர் மீது தற்போது ஊழல் வழக்குகள் நடைபெற்று வருவதாகவும் இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சிதான் என்றும் விமர்சித்தார்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு உயர்மட்ட பாலங்கள் கட்டப்பட்டதாகவும் திமுக ஆட்சியில் கைவிடப்பட்ட நெமிலிச்சேரி வண்டலூர் வெளிவட்ட சாலை திட்டத்தை அதிமுக ஆட்சி வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளதாகவும் தெரிவித்தார்.

மழைக்காலங்களில் சென்னையில் சாலைகளில் மழைநீர் தேங்காதவாறு பல்வேறு கட்டமைப்புகளை மேம்படுத்தி உள்ளதாகவும் ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் மேயராக இருந்த போது எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வராமல் தூங்கி கொண்டிருந்தாரா எனவும் கேள்வியெழுப்பினார்.

ஸ்டாலினுக்கு அதிமுக அரசு செய்யும் எந்த நலத்திட்டங்களும் கண்ணுக்குத் தெரியவில்லை என்றால் அவருக்கு பார்வையில் கோளாறா அல்லது ஞாபகத்தில் கோளாறு என்று தெரியவில்லை என விமர்சித்தார் மேலும் 2ஜி வழக்கில் தீர்ப்பு வந்தால் தான் திமுக நிலை என்னவென்று தெரியும் என்றும் திமுக ஆட்சியில் மின் துறையை சரியாக கையாளாத காரணத்தால் தமிழகம் மின் தடையால் தவித்தது என்றும் தற்போது அதிமுக ஆட்சியில் தமிழகம் மின் மிகை மாநிலமாக திகழ்கிறது என்றும் தெரிவித்தார்.

விரைவில் வண்ணாரப்பேட்டை விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவையை பாரதப் பிரதமர் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார் என்றும் தெரிவித்தார்.

மேலும் வீடு இல்லாத மக்களுக்கு நாங்கள் வீடு கட்டிக் கொடுப்போம் என்றும் தற்போது சென்னை மாநகரம் முழுவதும் தூய்மை நகரமாக மாறி இருக்கிறது என்றும் தெரிவித்தார் ஆனால் ஸ்டாலின் மேயராக இருக்கும் போது தூய்மைக்காக என்ன செய்தார் எனவும் கேள்வி எழுப்பினார்..

திமுக ஆட்சியில் இருந்தபோது அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையிலேயே எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவுக்கு திமுக உறுப்பினர்களால் அநியாயம் நிகழ்ந்தது என்றும் தற்போது திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் திமுகவினர் தாங்கள் செல்லும் கடைகளில் எல்லாம் பணம் தராமல் கடைக்காரர்களை மிரட்டி அடித்து வருவது வாடிக்கை ஆகி விட்டதாகவும் விமர்சித்தார்.

இப்போது சென்னையில் மழை காலத்தில் மழைநீர் தேங்குகிறது என புலம்பும் ஸ்டாலின் அவர் மேயராக இருந்த பொழுது ஒரு திட்டத்தையும் கொண்டு வராதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார் மேலும் திமுகவினர் கட்டப்பஞ்சாயத்து செய்து ஏழைகளிடம் இருந்து நிலங்களை பிடுங்கி அராஜகம் செய்ததாகவும் அவர்களுக்காகவே கொண்டுவரப்பட்ட சட்டம்தான் நில அபகரிப்பு சட்டம் என்றும் விமர்சித்தார்.

ஸ்டாலினுக்கு முதல்வராக கூடிய தகுதி இல்லை என்றும் உழைத்து வந்தவர்களுக்கு அந்த தகுதி இருக்கிறது என்றும் விமர்சித்தார் மேலும் அதிமுக இரண்டாக மூன்றாக உடைந்துவிடும் என கூறிவந்த ஸ்டாலினால் என்னை மட்டுமல்ல அதிமுக தொண்டர்களை கூட அசைத்துப் பார்க்க முடியாது என்றும் தெரிவித்தார்.

தி.நகர் பகுதி ரஜினி மக்கள் மன்றத்தினர் கூண்டோடு விலகி முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். தி.நகர் எம்எல்ஏ சத்யா நிகழ்ச்சியில் ஏழைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
06-Mar-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee