தமிழ்நாடு

அரசு மதுபானக்கடை மேலாளரை பின்தொர்ந்த கொள்ளையர்கள். பின் நடந்த கொடுமை

அரசு மதுபானக்கடை மேலாளரை கத்தியால் வெட்டி அவரிடமிருந்த 7 லட்சத்து 80 ஆயிரம் பணம் கொள்ளை

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பாலூர் அரசு மதுபானக் கடையில் பொங்கல் பண்டிகை என்பதால் அதிகபடியாக விற்பனை இருந்தது.  

இரவு விற்பனை முடிந்து கொண்டு விற்பனை பணம் 7 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை கடை மேலாளர் சுரேஷ் குமார் மற்றும் அவர் நண்பர் சங்கர் இருவரும் இரவு 11-மணி அளவில் அவர் வீட்டுக்கு  இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் அம்மனூர் என்ற இடத்தில் அவர்களை கத்தியால் தாக்கி அவர்களிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்து உள்ளனர்.

 இதில் சுரேஷ்குமார் சங்கர் இருவரும் படுகாயம் அடைந்தனர் இவர்கள் 2 பேரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்த வழிப்பறி கொள்ளை குறித்து செய்யூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
06-Mar-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee