தனது வாகனத்தில் லிஃப்ட் கொடுத்த இளம் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் நகையை பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கரூர் காந்தி கிராமம் நகர் எழில் பகுதியை சேர்ந்த சுருதி நிவேதா ( வயது 21 ) தான்தோன்றி மலையில் இயங்கி வரும் அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்
இவர் கரூர் வெங்கமேடு பகுதியில் இருந்து கரூர் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த போது 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சுருதி நிவேதாவை கை காட்டி இருக்கிறார்.. அதனால் வண்டியை சுலோ செய்த நிவேதாவிடம் வாகனத்தில் லிஃப்ட் கேட்டிருக்கிறார் அந்த பெண்ணை ஏற்றிக்கொண்டு பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருக்கிறார். வெங்கமேடு நிலையம் ரயில்வே மேம்பாலம் அருகே வந்தபோது திடீரென கத்தியை காட்டி மிரட்டி நிவேதாவிடம் இருந்த 3 பவுன் நகையை ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு பின்னே வந்த இருசக்கர வாகனம் மூலம் தப்பிச் சென்றுள்ளார்
இதுகுறித்து நிவேதா கரூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்த அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பட்டப்பகலில் ஒரு பெண் வாகனத்தில் நீதி கேட்டு கத்தியை காட்டி பணம் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது