வேலூரில் நடைபெற்ற எருதுவிடும் விழாவில் இரண்டு காளைமாடுகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒரு காளைமாடு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் நேற்று எருதுவிடும் விழா நடைபெற்றது
அதில் அணைக்கட்டு, ஓசூர்,கணியம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. இந்நிலையில் கணியம்பாடியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கரிமேடு கருவாயன் என்று காளைமாடு விழாவில் பங்கேற்று ஓடிய போது திடீரென எதிரே ஒரு மாடு வந்ததில் இரண்டு காளைமாடுகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் கரிமேடு கருவாயன் மாடு பலத்த காயமடைந்த பரிதாபமாக உயிரிழந்தது
இதனையடுத்து அந்த காளையின் உரிமையாளர் சுரேஷ் உயிரிழந்த காளைக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்து, மாலை அணிவித்து நல்லடக்கம் செய்தார் இந்த சம்பவம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது