Just In

தேசியக் கொடி ஏற்றி வைத்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்..!!

72 வது குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

நம் நாட்டின் 72ஆவது குடியரசு தின விழா, நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருக்கும் போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும் மலர் தூவியும் மோடி மரியாதை செலுத்தினார். பின்னர், அவர் குடியரசு தின நிகழ்ச்சியில் நடைபெறும் டெல்லி ராஜ்பாத்திற்கு வந்தார்.

இந்த நிலையில், டெல்லி ராஜ்பாத்தில் குடியரசு தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். சிறப்பு விருந்தினர் இன்றி அங்கு கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. தற்போது, ராணுவ வலிமையை பறைசாற்றும் விதமாக ராணுவ வீரர்களின் அணிவகுப்பு தொடங்கியிருக்கிறது. 

அதிநவீன ஆயுதங்களுடன் வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்றுள்ளனர். இதைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளின் அணிவகுப்புகள் நடைபெறவுள்ளது. வழக்கமாக 8 மணிக்கு நடத்தப்படும் குடியரசு தின விழா, டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக தாமதமாக தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
04-Mar-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee