டெல்லியில் விவசாயிகள் பேரணியில் வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில் அமித்ஷா அவசர ஆலோசனை
டெல்லியில் விவசாயிகள் பேரணியில் வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில் அமித்ஷா அவசர ஆலோசனை
டெல்லி:-
டெல்லியில் விவசாயிகள் பேரணியில் வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை நடத்திய வருகிறார். உளவுத்துறையின் தகவல்களின் அடிப்படையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
டெல்லியில் வன்முறை நிகழ்ந்தது தொடர்பாக காவல்துறையிடம் அறிக்கை கேட்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே டெல்லியில் விவசாயிகள் பேரணியில் வன்முறை ஏற்பட்டதையடுத்து நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.