தொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் தளத்தில் புதிய அப்டேட் ..!!!

வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் தளத்தில் புதிய பாதுகாப்பு அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் தளங்களில் பயோமெட்ரிக் ஆதென்டிகேஷன் வசதியை வழங்கி வருகிறது. இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. 

இது வெப் அல்லது டெஸ்க்டாப் தளத்தை பயன்படுத்துவோருக்கு கூடுதல் பாதுகாப்பு வசதியை வழங்குகிறது.
WhatsApp Web | Parent Zone

வாட்ஸ்அப் பிரைமரி சாதனம் மற்றும் வெப் / டெஸ்க்டாப் தளத்தை இயக்கும் போது கூடுதல் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 

இந்த அம்சம் உரையாடல்களை துவங்கும் முன் கைரேகை அல்லது பேஸ் அன்லாக் போன்ற சோதனையை கொண்டு மற்றவர்கள் வாட்ஸ்அப் வெப் / டெஸ்க்டாப் தளத்தை இயக்குவதை தவிர்க்க உதவுகிறது.
What is WhatsApp Web and How to use it?

ஆண்ட்ராய்டு தளத்தில் புதிய பாதுகாப்பு அம்சத்தை இயக்க பயனர்கள் வாட்ஸ்அப் செயலியில் More options ⇾ Link a Device ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். பின் வாட்ஸ்அப் ஸ்மார்ட்போனின் பயோமெட்ரிக் ஆதென்டிகேஷன் வசதியை இயக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தெரிவிக்கும். 

ஐபோன்களில் Link a Device ⇾ OK ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். பின் பயனர்கள் திரையில் தெரியும் கியூஆர் கோட் கொண்டு வாட்ஸ்அப் வெப் / டெஸ்க்டாப் பயன்படுத்த துவங்கலாம்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Feb-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee