தொழில்நுட்பம்

சென்னையில் இ-பைக் திட்டம் : சிறப்பம்சங்கள் இதோ!

சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசுவை குறைக்கும் நோக்கில் ஸ்மார்ட் சைக்கிள் திட்டம் தொடங்கப்பட நடைமுறையில் உள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசுவை குறைக்கும் நோக்கில் ஸ்மார்ட் சைக்கிள் திட்டம் தொடங்கப்பட நடைமுறையில் உள்ளது. இந்த திட்டமானது ஏற்கெனவே 74 இடங்களில் வாடகை அளிக்கும்முறையில் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் அடுத்தகட்டமாக ஸ்மார்ட் பைக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக மயிலாப்பூர் நாகேஷ்வரராவ் பூங்கா, மெரினா கடற்கரை, நந்தனம், அண்ணாநகர் கிழக்கு, திருமங்கலம் , பாண்டி பஜார் உள்ளிட்ட இடங்களில் ஸ்மார்ட் பைக் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 32 ஸ்மார்ட் பைக்குகள், 32 அடுத்த தலைமுறை சைக்கிள்கள் திட்டத்தை முதல்வர் பழனிசாமி நேற்று தொடங்கியுள்ளார். இதற்கான app ம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள, http://onelink.to/t74gmp என்ற இணையதள முகவரியில், ஸ்மார்ட் பைக் கைபேசி செயலியை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த ஆப் மூலம் பைக்குகளை இயக்கி கொள்வதுடன் கட்டணத்தையும் பயனர் செலுத்தி கொள்ளலாம். 

இந்த பைக்கானாது பேட்டரியால் இயக்கக்கூடியது. இதை இயக்க முதல் 10 நிமிடங்களுக்கு ரூ.10, அதற்கு அடுத்த ஒவ்வொரு நிமிடத்துக்கும் ரூ.1 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு தனியாக ஜிஎஸ்டி கட்டணமும் உள்ளது. 

இதேபோல் அடுத்த தலைமுறை சைக்கிள்களை பயன்படுத்த ஒரு மணி நேரத்திற்கு ரூ.5.50 மற்றும் அடுத்த ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் ரூ.9.90 என கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கு ஜிஎஸ்டி கட்டணம் தனியாக வசூலிக்கப்படும். இத்திட்டத்திற்கு பொதுமக்கள் அளிக்கும் வரவேற்புக்கு அடிப்படையில் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி மூலம் இயங்கும் பைக்குகள் இந்த பைக்குகள் பெடல் செய்யக்கூடியவை.முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டவுடன் 45 கி.மீ. இந்த பைக்குகள் இயக்கப்படும். இதன் டயர்கள் பஞ்சர் ஆகாது, சங்கிலி உடையாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. QR குறியீடுகளைப் பயன்படுத்தி பைக்கைத் திறக்க முடியும். பயண விவரங்கள், பயணித்த தூரம் மற்றும் சார்ஜ் பயன்பாடு போன்றவை இந்த ஆப்பில் சரிபார்த்து கொள்ளலாம்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
13-Apr-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate