தற்போது அடுத்த தயாரிப்பாக 'MI ஏர் சார்ஜ் வயர்லெஸ் சார்ஜர்' என்ற கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கண்டுபிடிப்பு அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது.
'MI ஏர் சார்ஜ் வயர்லெஸ் சார்ஜர்' மூலம் டிஜிட்டல் டிவைஸ்களை இனி காற்றிலேயே சார்ஜ் செய்யும் வசதி அறிமுகமாகியுள்ளது. இதன் மூலம் வொயர் பயன்படுத்தாமல் ஒரே நேரத்தில் பல டிவைஸ்களை சார்ஜ் செய்யலாம். இந்த தகவலை சியோமி நிறுவனம் அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது
அதிகபட்சமாக 2 மீட்டர் தூரம் வரை இந்தக் கருவியின் மூலம் டிஜிட்டல் சாதனங்களுக்கு சார்ஜ் செய்ய முடியும் என சொல்லப்படுகிறது.இதை வெற்றிகரமாக சியோமி சந்தையில் அறிமுகம் செய்தால் அது வைரலாக பேசப்படவும் வாய்ப்பு உண்டு.