ஆன்மிகம்

காமாட்சி விளக்கை தினமும் ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

வீட்டில் விளக்கு ஏற்றுவது என்பதே, வீட்டை ஒளியூட்டும் சிறப்பான ஒரு விஷயம்தான். இதில், காமாட்சி விளக்கை ஏன் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகிறார்கள்? அந்த விளக்கை வீட்டில் ஏற்றி வைப்பதால் என்ன நன்மை ஏற்படும்? என்பதை இப்போது காணலாம்.

விளக்குகளில் வட்ட முகம், இரட்டை முகம் முதல் 5 முகம் என பல விதங்களில் காணப்படுகின்றன. இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் இல்லங்களில் ஏற்றப்படும் காமாட்சி விளக்கு திகழ்கிறது. 

ஏனெனில், காமாட்சி அம்மனுக்குள் அனைத்து தெய்வங்களும் அடக்கம் என்பதால், ஒவ்வொருவரும் தங்களுடைய குலதெய்வங்களை நினைத்துக் கொண்டு காமாட்சி விளக்கை ஏற்றி வணங்குவது ஐதீகம்.

பொதுவாக, உலக மக்களின் நன்மைக்காக தவம் இருந்தவர், காமாட்சி அம்மன். அவர் அப்படி தவம் இருந்த வேளையில், சகல தெய்வங்களும் காமாட்சி அம்மனுக்குள் அடங்கியது. இதன் காரணமாக காமாட்சி அம்மனை வழிபட்டாலே, ஒருவருக்கு அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைத்துவிடும்.

1. வீட்டில் அனைத்து விதத்திலும் மங்களம் உண்டாகும்.
2. குலம் தழைக்கும்.
3. கிரக தோஷங்கள் தீரும்.
4. செல்வம் செழிக்கும், வறுமை நீங்கும்.
5. வழக்குகள் வெற்றி அடையும்.
6. நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் விலகும்.


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Feb-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee