Just In

11 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறப்பு!

11 மாதங்களுக்கு பிறகு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டன.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு கிடந்தன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. 

தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில்கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கலை, அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், டிப்ளமோ கல்லூரி மாணவர்களுக்கும் இன்றுமுதல் வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளது. 

கல்லூரி மாணவர்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. இறுதியாண்டு மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் அனைத்து வகுப்புகளும் இன்று திறக்கப்பட்டது.


முன்னதாக இன்று முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் தற்போது 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் திறக்கப்பட்டு இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
13-Apr-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate