இந்தியா

முதல்வரின் மகளிடமே ஆன்லைனில் பண மோசடி..!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதாவிடம் ஆன்லைனில் பண மோசடியில் ஈடுபட்டவர் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா பழைய சோபா ஒன்றை விற்பனை செய்வதற்காக பிரபல விற்பனை தளமான OLX ல்  விளம்பரம் கொடுத்திருந்தார். 

இதனைப் பார்த்த சைபர் மோசடி கும்பலைச் சேர்ந்த ஒருவர் ஹர்ஷிதாவை அணுகி சோபாவை வாங்குவதற்காக ஹர்ஷிதாவின் வங்கிக் கணக்கை வாங்கி அவரின் நம்பிக்கையைப் பெறுவதற்காக சிறிய அளவு பணத்தை செலுத்தியுள்ளார்.

பின்னர் கியூ ஆர் கோடு (QR code) லிங்க் ஒன்றை அனுப்பி வைத்து அதன்மூலம் ஹர்ஷிதாவின் வங்கிக் கணக்கில் இருந்து 34,000 ரூபாய் பணத்தை எடுத்துள்ளார் 

இந்த சைபர் மோசடி குறித்து டெல்லி சிவில் லைன் காவல்நிலையத்தில் ஹர்ஷிதா புகார் அளித்திருப்பதாகவும், இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
13-Apr-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate