லைப் ஸ்டைல்

ஏடிஎம் கார்டை எத்தனை முறைக்கு மேல் பயன்படுத்தினால் அபராதம் .!!

ஏடிஎம் கார்டை எத்தனை முறைக்கு மேல் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்பது குறித்த தகவல்கள்

வங்கி பரிவர்த்தனையை பொறுத்தவரை டெபிட் கார்ட் இன்றியமையாத ஒன்று. எப்போது வேண்டுமாலும் நம்முடைய வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்து கொள்ள ஷாப்பிங் செய்ய டெபிட் கார்ட் பயன்படுகிறது. இ.எம்.ஐ கட்டணமும் செலுத்துவது எளிதாக உள்ளது.

ஆனால் டெபிட் கார்டை பயன்படுத்தும் போது சில நேரங்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக ஏடிஎம் மையங்களில் இருந்து மாதத்துக்கு 5 முறையும், பிற வங்கிகளின் ஏடிஎம்களில் மாதத்துக்கு 3 முறையும் இலவசமாக பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த வரைமுறை மீறும் பட்சத்தில் வங்கி குறிப்பிட்ட தொகையை அபராதமாக வசூலிக்கிறது.

அதே போல் வங்கிகள் குறைந்த பட்ச பேலன்ஸ், ஏ.டி.எம்.பண பரிவர்த்தனை, காசோலை பயன்பாடு உள்ளிட்டவற்றை சேவைகளை இலவசமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. வரைமுறைகளை தாண்டிய ஏ.டி.எம். பரிவர்த்தனை, காசோலை பயன்பாடு, டெபிட் கார்டு உள்ளிட்டவற்றுக்கு ஜிஎஸ்டி வரி சேர்த்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டண சேவை ஒவ்வொரு வங்கிக்கு ஏற்ப மாறுபடுகிறது.

எஸ்பிஐ வங்கி:

கோல்ட் டெபிகார்ட் கார்டு கட்டணம் ரூ.100 கூடுதலாக ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். ப்ளாட்டினம் டெபிகார்ட் கார்டு கட்டணம் ரூ.306 கூடுதலாக ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். கிளாசிக் டெபிகார்ட் கார்டு கட்டணம் ரூ.100 கூடுதலாக ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். டெபிட் கார்டு ஆண்டு கட்டணம் ரூ.150, டெபிட்கார்டு தொலைந்தால் ரூ.200 கட்டணமாக வசூலிக்கப்படும்.

எச்டிஎப்சி வங்கி:

 எச்எடிஎப்சி வங்கி ஏடிஎம்களில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் முற்றிலும் இலவசம். ஆனால். பிற வங்கிகளின் ஏடிஎம்களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ. 20 கட்டணம் வசூலிக்கப்படும். ஆண்டுந்தோறும் டெபிகார்டு கட்டணம் ரு.150 மாக உள்ளது.

ஐசிஐசிஐ வங்கி:

ஐசிஐசிஐ டெபிட் கார்டை பெற ரூ.250 செலுத்த வேண்டும். டெபிகார்டை தொலைத்தால் ரூ.199 வசூலிக்கப்படும். அதே போல், ஐசிஐசிஐ வங்கிகளில் எத்தனை முறை வேண்டுமானலும் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் மற்ற எடிஎம்களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.20 ஆக வசூலிக்கப்படும்

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Feb-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee