அரசியல்

விவாதத்திற்கு அழைத்தால் ஸ்டாலின் வர மறுக்கிறார்...!!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேர்தல் பிரச்சாரங்கள் அனல் பறக்கின்றன.

ஒவ்வொரு மாவட்டமாக ‘வெற்றி நடை போடும் தமிழகம்’ என்ற தலைப்பில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் முதல்வர் பழனிசாமி, அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். 

விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருக்கும் முதல்வர், கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார்.

இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பேசிய அவர், மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடர்ந்து ஊக்குவிக்கப்படும். 

தமிழகத்தில் நடக்கும் அதிமுக ஆட்சி தொண்டர்களின் ஆட்சி. மக்களுக்கு கொடுக்கும் ஆட்சி இது என அதிரடியாக பேசினார். பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது விவசாயிகளுக்கு 15 நாட்களில் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

மேலும் ஆட்சியில் இருக்கும் போது மக்களை சந்திக்காமல் தேர்தல் நேரத்தில் ஸ்டாலின் மக்களை சந்திப்பதாக குற்றஞ்சாட்டிய முதல்வர், விவாதத்திற்கு அழைத்தால் ஸ்டாலின் வர மறுப்பதாகவும் தெரிவித்தார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Feb-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee