காங்கிரஸின் மாநிலங்களவை தலைவரான குலாம் நபி ஆசாத்தின், மாநிலங்களவை பதவிக்காலம் இந்த கூட்டத்தொடரோடு முடிவடைகிறது.
அவருடன் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 3 எம்.பிக்களின் பதவிக்காலமும் முடிவடைகிறது. அவர்கள் 4 பேருக்கும் பிரியாவிடை கொடுக்கும் விதமாக பிரதமர் மோடி, அவையில் பேசினார்.
அப்போது, குலாம் நபி ஆசாத் காஷ்மீரில் இருந்த போது குஜராத்தை சேர்ந்த சில சுற்றுலா பயணிகள் தீவிரவாதிகளிடம் சிக்கிக் கொண்டதாகவும் அப்போது குலாம் நபி ஆசாத் தனக்கு மிகுந்த உதவி புரிந்ததாகவும் தான் அவருக்கு நன்றிக் கடன் பட்டிருப்பதாகவும் கூறினார்.
தொடர்ந்து, தீவிரவாதிகளிடம் சிக்கிய அந்த பயணிகளை தனது குடும்பத்தில் ஒருவரென நினைத்து குலாம் நபி ஆசாத் உதவி செய்ததாக மோடி கூறியதும் கண்களில் கண்ணீர் பெருகியது..
சிறிது நேரம் பேசாது நின்ற மோடி, தண்ணீர் பருகிய பிறகு மீண்டும் பேசத் தொடங்கினார். குலாம் நபி ஆசாத்துக்கு தலைக்கனம் இருந்ததில்லை என்றும் நாடாளுமன்றத்திற்குள் தாங்கள் ஒரு குடும்பமாக பழகி வருவதாகவும் உணர்ச்சிவசத்துடன் தெரிவித்தார்
என்னதான் எதிர்க்கட்சியாக இருந்தாலும், கொள்கையில் வேறுபாடுகள் இருந்ததாலும் கட்சியில் பாகுபாடு இன்றி மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி குலாம் நபி ஆசாத்தின் ஓய்வுக்காலம் குறித்து பேசிய போது பிரதமர் மோடி கண் கலங்கியது எதிர்க்கட்சிகளிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது