இந்தியா

ஹைதராபாத்தில் ஆட்டோ டிரைவர் செய்த அட்டூழியம்...!!!

இன்ஜினியரிங் மாணவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி சென்ற டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்

ஹைதராபாத்தை சேர்ந்த இன்ஜினியரிங் மாணவி ஒருவர் நேற்று முன்தினம் மாலை கல்லூரியில் இருந்து வீடு திரும்புவதற்காக ஆட்டோ ஒன்றில் பயணித்தார். ஹைதராபாத்தில் உள்ள கட்கேசர் பகுதியில் ஆட்டோ சென்று கொண்டிருந்த போது அந்த மாணவியை முட்புதர்களுக்குள் தூக்கி சென்ற ஆட்டோ டிரைவர் அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகினான்.

பின்னர் மாணவியின் ஆடைகள் முழுவதையும் கலைந்து அபகரித்த ஆட்டோ டிரைவர் அந்த மாணவியை அங்கேயே கை விட்டு சென்று விட்டான்.

இதனால் மாணவி செய்வதறியாது திகைத்து அழுது புலம்பி இருப்பதை பார்த்த அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் அவருக்கு ஆடைகளை வழங்கி பின்னர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

போலீசார் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் கட்கேசர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
13-Apr-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate