உலகம்

மஞ்சள் அரைத்துப் பூசிய பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!

முகத்தில் உள்ள பருக்களை மறைய வைக்க மஞ்சள் கலவையை பூசிய பெண்ணின் முகம் மஞ்சளாக மாறிய சோகம் ஸ்காட்ந்தில் நடந்துள்ளது.

ஸ்காட்லாந்தை சேர்ந்த டிக்டாக் பிரபலம் லாரன் ரென்னி. முகப்பருக்களால் அவதிப்பட்டு வந்த அவர், யூடியூப்பை பார்த்து மஞ்சள், தேன், பாதாம் உள்ளிட்டவற்றை கொண்டு ஃபேஸ்பேக் ஒன்றை தயார் செய்துள்ளார். 

அதை முகத்தில் போட்டுக் கொண்டு இன்னும் சிறிது நேரத்தில் முகத்தில் உள்ள பருக்கள் மறைந்து அழகாக மாறிவிடுவேன் என போஸ்ட் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

ஃபேஸ்பேக்கை எவ்வளவு நேரம் முகத்தில் போட்டிருக்க வேண்டும் என்பதை சரியாக அந்த வீடியோவில் கவனிக்க மறந்த அவர், சில மணி நேரங்கள் கழித்து அந்த ஃபேஸ்பேக்கை எடுத்துள்ளார்.

அப்போது அவரது முகம் முழுவதும் மஞ்சள் நிறமாக மாறியிருந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், சோப், ஃபேஸ்வாஷ் உள்ளிட்ட பலவற்றை பயன்படுத்தியும் முகத்தில் இருந்து மஞ்சள் போகவில்லை. 

இதுகுறித்து வீடியோ வெளியிட்ட அவர், சுமார் 3 வாரங்களாக மஞ்சள் நிறம் கொண்ட முகத்துடனேயே இருந்தேன். இது எனக்கு ஒரு மோசமான அனுபவமாக இருந்தது என தெரிவித்தார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
13-Apr-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate