டோலிவுட்டில் தொடர்ந்து பல்வேறு இயக்குனர்கள் நடிகர்கள் என்று சினிமா துறையைச் சேர்ந்த பலர் மீதும் பாலியல் குற்றச்சாட்டை வைத்து நடிகை ஸ்ரீ ரெட்டி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதன் காரணமாக, அவரை சினிமா உலகினர் ஓரம் கட்டி விட்டனர்.
பின்னர் சென்னைக்குள் ஸ்ரீரெட்டி தஞ்சம் புகுந்தார். தமிழ் சினிமாவிலும் தொடர்ந்து இயக்குனர்கள் சுந்தர்.சி, முருகதாஸ் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் விஷால் உள்ளிட்டோர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் வைத்திருந்தார். அத்துடன் தன்னுடன் நடித்த சக நடிகைகளையும் அவர் மோசமாக விமர்சித்தார்
இத்தகைய சூழலில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகை ஸ்ரீரெட்டி நடக்க இருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.