சில தினங்களுக்கு முன்பு அமெரிக்க கடலோர காவல்படையினர் பஹாமாஸ் பகுதியில் விமானம் மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அங்கியுலா தீவில் ஏதோ ஒரு கொடி அசைவது போல் இருந்துள்ளது. பின்னர் கூர்ந்து பார்த்தபோது தான் அங்கு மூன்று மனிதர்கள் நிற்பது தெரியவந்துள்ளது.
அதிர்ச்சியடைந்த விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார்...மேலும் அவர்கள் மூவரையும் மீட்க ஹெலிகாப்டர் மூலம் ஆட்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவுகள் வழங்கப்பட்டது.
வானிலை மோசமாக இருந்ததால் மூவரையும் உடனடியாக மீட்க முடியவில்லை. அவர்களுக்கு தொடர்பு கொள்ள ரேடியோ கொடுக்கப்பட்டு அதன்வழியாக விசாரித்ததில் அவர்கள் கியூபா நாட்டை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
ஒரு பெண் மற்றும் 2 ஆண்கள் உட்பட மூன்று பேர், தனி படகின் மூலம் பஹாமாஸ் பகுதிக்கு பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், திடீரென இவர்கள் சென்ற படகு, எதிர்பாராதவிதமாக, கவிழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது, இதனால் மூவரும், அங்கியுலா கேய் என்னும் ஆள் அரவமற்ற பாலைவன தீவில் சிக்கியுள்ளனர்.
ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு சிக்கி கொண்டிருந்தவர்கள் உயிர் பிழைக்க தேங்காய்கள், எலியின் கறி, சங்குக்கறி உள்ளிட்டவற்றை சாப்பிட்டு நாட்களை கழித்து வந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்
அவர்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என தெரியவந்ததை அடுத்து அவர்களை மறுநாள் மீட்டு மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.