உலகம்

இறந்தவரின் எலும்பு கூடு வைத்து கிட்டாரா..?? இசை கலைஞரின் அதிர்ச்சி பின்னணி

இசை கலைஞர் ஒருவர் இறந்தவரின் எலும்பு கூட்டை வைத்து கிட்டார் ஒன்றை உருவாக்கி உள்ள சம்பவம் காண்பவர்களுக்கு ஆச்சர்யத்தை குடுக்கிறது.

தன்னை 'பிரின்ஸ் மிட்நைட்' என்று அழைக்கும் ஒரு இசைக்கலைஞர் தனகென்று இசை கருவி ஒன்றை உருவாக்கியுள்ளார். ஆனால் இந்த இசை கருவியை உலகில் எந்த இசைக்கலைஞர்களும் தொட விரும்ப மாட்டார்கள்.

ஏனென்றால் இந்த இசை கருவியானது இந்த இசைக்கலைஞரின் இறந்த உறவினர் ஒருவரின் எலும்பு கூடுகள் வைத்து உருவாக்கப்பட்ட ஒரு விசித்திர படைப்பாகும் 

இளவரசர் மிட்நைட் இசை கலைஞர் தனது இறந்த மாமாவின் எலும்புக்கூட்டைப் பயன்படுத்தி இந்த கிட்டாரை உருவாக்கி உள்ளார்.

இந்த இசை கலைஞரின் மாமா இறக்கும் போது மாமாவை அடக்கம் செய்வதற்குப் பதிலாக, இசைக்கலைஞர் அவரது எலும்புக்கூட்டைப் பயன்படுத்தி முழுமையாக செயல்படும் மின்சார கிட்டார் உருவாக்க முடிவு செய்தார்.

தனது மறைந்த மாமா பிலிப்பை கவுரவிக்கும் விதமாக இவர் இந்த திட்டத்தை செய்ததாக பிரின்ஸ் மிட்நைட் கூறினார். 

இசைக்கலைஞர் எலும்புக்கூட்டை சேர்த்து சில பொருள்களை பயன்படுத்தி எலும்புகூட்டை மின்சார கிட்டார் ஆக மாற்றி உள்ளார்.

இசைக்கலைஞர் தனது வினோதமான படைப்பின் பின்னணியில் இருக்கும் கதையை பேட்டி ஒன்றில், "எனது, மாமா பிலிப்பை ஒரு கிட்டாராக மாற்ற முடிவு செய்தேன். ஆனால், இது சவாலானது. இதற்காக நான் நிறைய ஆராய்ச்சி செய்தேன், யாரும் எலும்புக்கூட்டில் இருந்து ஒரு கிட்டார் இதுவரை தயாரிக்கவில்லை. எனவே, நான் அதைச் செய்தேன். "என்று மிட்நைட் கூறினார்.

மாமா பிலிப்பின் எலும்புக்கூடு முதலில் ஒரு மருத்துவக் கல்லூரிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது மற்றும் பல ஆண்டுகளாக மாணவர்களால் பயன்படுத்தப்பட்டது.

கல்லூரிக்கு இனி உடல் தேவையில்லை என்றும் அதனால் பிலிப்பின் குடும்பத்தினர் அவரை தகனம் செய்ய விரும்புவதாகவும் கூறினர்.அதனால் தான் நான் இந்த கிட்டாரை உருவாக்கினேன் என்று அவர் கூறினார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
13-Apr-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate