உலகம்

ஐரோப்பிய கூட்டமைப்பு உடனான உறவுகளை துண்டிக்க தயார் - ரஷ்யா அதிரடி!!!

ஐரோப்பிய யூனியன் எங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்தால் உறவைத் துண்டித்துக் கொள்ளக் தயாராக இருக்கிறோம் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

மாஸ்கோ:-

ரஷ்யாவில் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியை கைது செய்து சிறை தண்டனை விதித்த விவகாரத்தில் அந்நாட்டு அரசுக்கும் ஐரோப்பிய‌ கூட்டமைப்புக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

அலெக்சி நவால்னியை சிறை வைத்திருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனக் கூறும் ஐரோப்பிய கூட்டமைப்பு அவரை உடனடியாக விடுவிக்கக் கோரி ரஷ்ய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

கைது செய்யப்பட்ட அலெக்ஸி நவால்னிக்கு மோசடி வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் அலெக்ஸிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து அவருடைய ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, ரஷ்யாவில் அலெக்சி நவால்னிக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக ஜெர்மனி, போலந்து மற்றும் சுவீடன் ஆகிய ஐரோப்பிய நாடுகளின் 3 தூதர்களை ரஷ்யா அதிரடியாக வெளியேற்றியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மேற்கூறிய 3 ஐரோப்பிய நாடுகளும் தங்களது நாடுகளிலிருந்து ரஷ்ய தூதர்களை வெளியேற்றியது. மேலும், இந்த விவகாரத்தில் ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என ஐரோப்பிய கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

இந்நிலையில், பொருளாதார ரீதியாக வலிமிகுந்த புதிய பொருளாதார தடைகளை விதித்தால் ஐரோப்பிய கூட்டமைப்புடனான உறவுகளை துண்டிக்கத் தயாராக உள்ளோம் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் கூறுகையில், ஐரோப்பிய கூட்டமைப்பின் பொருளாதாரத் தடைகள் மிக முக்கியமான பகுதிகள் உள்பட நமது பொருளாதாரத்துக்கு அபாயங்களை உருவாக்கும். 

மேலும் இந்த தடைகளால் உறவுகளில் முறிவு ஏற்படக்கூடும். உலக விவகாரங்களிலிருந்து எங்களை தனிமைப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. ஆனால் நாங்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
13-Apr-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate