விவசாயிகள் போராட்டத்தை கையாளும் விதம் தொடர்பாக இந்திய அரசுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாராட்டு தெரிவித்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விவசாயிகள் போராட்டத்தை கையாளும் விதம் தொடர்பாக இந்திய அரசுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாராட்டு தெரிவித்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லி:-
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் தொடர் போராட்டம் சமூக வலைத்தளங்கள் மூலமாக சர்வதேச கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இதன் எதிரொலியாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், பாப் இசைப்பாடகி ரிஹானா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என அந்த பிரபலங்களுக்கு சமூக வலைத்தளங்களில் சச்சின் உள்ளிட்ட இந்திய பிரபலங்கள் பதிலடி கொடுத்தனர்.
முன்னதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் கடந்த ஆண்டு இறுதியில் .விவசாயிகள் மீது காவல் துறை கடுமையாக நடந்து கொண்டதாக விமர்சித்து இருந்ததோடு, போராட்டத்திற்கு ஆதரவான கருத்தையும் வெளிப்படுத்தி இருந்தார். ஜஸ்டின் ட்ரூடோவின் இத்தகைய கருத்து மத்திய அரசுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த பிரச்சினை இந்தியாவின் உள்விவகாரம் என உடனடியாக வெளியுறவு அமைச்சகம் பதிலடி தந்தது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, விவசாயிகள் போராட்டம், கொரோனா பரவல் உள்ளிட்ட முக்கியத்துவம் கொண்ட விவகாரங்கள் தொடர்பாக பேசியிருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் போது, இந்தியா தடுப்பூசியை பல்வேறு நாடுகளுக்கு அளிப்பதை பாராட்டியிருந்தார்.
இவ்விவகாரம் குறித்து வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா தனது வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார். அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறுகையில்,
“விவசாயிகள் போராட்டத்தில் ஜனநாயகத்துக்கு ஏற்ற பேச்சுவார்த்தை பாதையை தேர்ந்தெடுத்த இந்தியாவின் முயற்சிகளை கனடா பிரதமர் பாராட்டியதாக தெரிவித்தார். கனடாவில் உள்ள இந்திய தூதரக ஊழியர்கள், வளாகங்களுக்கு பாதுகாப்பு வழங்க தனது அரசுக்கு பொறுப்பு உள்ளது என ட்ரூடோ கூறியதாகவும் தெரிவித்தார்.