லைப் ஸ்டைல்

மென்மையான கூந்தலுக்கு இயற்கை தந்த வரம் நெய்!!!

உங்களுக்கு சாதத்தில் நெய் ஊற்றி சாப்பிடுவது என்றால் மிகவும் பிடிக்குமா..? அதே போல கூந்தலுக்கு எண்ணெய்க்கு பதில் நெய்யும் பயன்படுத்தலாம் என்பது தெரியுமா?

உணவில் பயன்படுத்தும் நெய்யை கொண்டு சருமம் போன்று கூந்தலுக்கும் பயன்படுத்தலாம் என்பது ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் உண்மையில் நெய் கூந்தலுக்கு நன்மை செய்கிறது. 

நெய்யை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் கூந்தலுக்கு உண்டாகும் நன்மைகள் குறித்து முழுமையான ஆராய்ச்சிகள் இல்லையென்றாலும் நெய் கூந்தலுக்கு எப்படி நன்மை தருகிறது என்பதை அறிந்துகொள்வோம்.

நெய்யை லேசாக சூடு செய்து, தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்துக்கொள்ளுங்கள். கூந்தலை கூடுதல் மிருதுவாகவும், பொலிவாகவும் வைக்க உதவும். கூந்தல் நன்றாக வளரும்.  கூந்தலுக்கு நல்ல கண்டிஷன் செய்ததுபோல இருக்கும். கூந்தலை வறண்டு போகாமல், ஆரோக்கியமாக ஈரப்பதமாக வைத்துக்கொள்ளும்.

நெய்யில் உள்ள வைட்டமின் A மற்றும் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும் வைட்டமின் D முடி உதிர்தலை எதிர்த்து போராட உதவுகிறது. நெய்யில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் கூந்தலுக்கு நன்மை தரக்கூடியவையே. கூந்தலுக்கு நெய் பயன்படுத்துவதற்கு முன்பு எப்படி இதை பயன்படுத்தலாம், என்ன பிரச்சனைகள் நீங்கும் என்பதை பார்க்கலாம்.

பொடுகுத் தொல்லை : நெய் மற்றும் பாதாம் எண்ணெய் இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை தலையில் நன்றாக தேய்த்துக் கொண்டு ஊறவைக்கவும். பின்னர் கழுவி விடுங்கள்.

கூந்தல் நிறம் குறைந்திருந்தால் : எலுமிச்சை சாறுடன் நெய் சேர்த்து கூந்தலில் தேய்த்துக்கொள்ளுங்கள். பத்து நிமிடம் ஊறியதும் குளித்து விடுங்கள். உங்கள் கூந்தலில் இயற்கையான பொலிவைப் பார்க்கலாம்.

இளநரை மற்றும்  சொரியாசிஸ் : இளநரை மற்றும் சொரியாசிஸ் உள்ளவர்கள், மருத்துவ குணம் கொண்ட நெய் தடவி மசாஜ் செய்து வந்தால், நல்ல தீர்வு கிடைக்கும்.

கூந்தல் அடர்திக்கு : நெய்யோடு, நெல்லிக்காய் ஜூஸ் மற்றும் வெங்காயச்சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்யுங்கள். விரைவில் உங்கள் கூந்தல் உதிர்வது குறைந்து நன்றாக வளரும். 

மேலும், நெய்யுடன் சம அளவு ஆலிவ் ஆயில் கலந்து பாட்டிலில் சேர்த்து குலுக்கி கொள்ளவும். இதை ஷாம்புக்கு பிந்தைய கண்டிஷனருக்கு பயன்படுத்துங்கள்.

இரண்டு அல்லது மூன்றாவது முறையில் உங்கள் கூந்தல் மிக அழகாக பட்டுப்போன்று மின்னுவதை நீங்கள் பார்க்கலாம்.


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Feb-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee