இந்தியா

இந்து எதிர்ப்பு ட்வீட்; டான்சிலா அனிஸை பணிநீக்கம் செய்தது கானா!!!

இந்து எதிர்ப்பு ட்வீட் மற்றும் ரிங்கு சர்மா கொலை தொடர்பான மனிதநேயமற்ற பதிவு காரணமாக கானா நிறுவனம் தன்சிலா அனிஸை நீக்கியுள்ளது.

டெல்லியின் மங்கோல்பூரி பகுதியில் 26 வயது பஜ்ரங் தள செயற்பாட்டாளர் ரிங்கு சர்மா படுகொலை செய்யப்பட்டார் . அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான நிதி திரட்டும் பிரச்சாரத்தில் ரிங்கு தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்த வழக்கில் முகமது இஸ்லாம், டேனிஷ் நசீருதீன், தில்ஷன், மற்றும் தில்ஷாத் இஸ்லாம் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனிடையே பஜ்ரங் தால் ஆர்வலர் ரிங்கு சர்மாவை கொலை தொடர்பாக சமூக ஊடகங்களில் மோசமான கருத்து தெரிவித்த மியூசிக் ஸ்ட்ரீமிங் தளமான கானா, அந்நிறுவன ஊழியரான டான்சிலா அனிஸை பணிநீக்கம் செய்துள்ளது. 

அவரது பதிவு ரிங்கு சர்மாவின் கொலையை நியாயப்படுத்தவும் வகையில் இருந்துள்ளதாக பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் கிளம்பியது, மேலும்  டான்சிலா அனிஸ் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கானா நிறுவனம் அவரை பணிநீக்கம் செய்துள்ளது.

இவ்விவகாரம் தொடரபாக கானா வெளியிட்ட அறிக்கையில், 

சமீபத்தில் எங்கள் நிறுவனத்தை சேர்ந்த ஒரு ஊழியரின் சர்ச்சைக்குரிய பதிவிற்கும் எங்கள் நிறுவனத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இதற்காக அவரை நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்துள்ளோம். இந்தியாவின் அனைத்து மதங்களையும் சமூகங்களையும் நாங்கள் மதிக்கிறோம் என்று கூறியுள்ளது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
13-Apr-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate