தமிழ்நாடு

பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி அறிவித்ததில் குழப்பமா? அமைச்சர் செங்கோட்டையன்

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் மே 3ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்குகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 3 முதல் 21ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மே 3ஆம் தேதி மொழித்தாள் பாடமும், மே 5 ஆம் தேதி ஆங்கிலம், மே 7 ஆம் தேதி கணினி அறிவியல், மே 11இல் இயற்பியல் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மே 17ஆம் தேதி கணிதம், மே 19 ஆம் தேதி உயிரியல், மே 21 ஆம் தேதி வேதியியல் தேர்வும் நடைபெறவுள்ளது.

தேர்வு சரியாக 10.15 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணிக்கு நிறைவுபெறும் என்றும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.

காலை 10 மணி முதல் 10.10 வரை வினாத்தாள் வாசிப்பதற்கும், 10.15 மணி வரை தேர்வர்கள் விவரங்கள் சரிபார்ப்புக்கும் நேரம் ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு தேதியை அறிவித்ததில் எந்த குழப்பமும் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் தேதியை பொறுத்தே தேர்வு தேதி அறிவிப்பு என கூறியது பற்றிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Feb-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee