தமிழ்நாடு

ஆட்டோ ஓட்டுநரின் நேர்மையை பாராட்டிய ஆணையர்..!!

காவல்நிலையத்தில் பணப்பையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் சுப்ரமணிக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டு தெரிவித்தார்

திருவல்லிக் கேணியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் சுப்ரமணியம். இவர் கடந்த 12ஆம் தேதி சவாரிக்கு சென்று விட்டு மெரினா காமராஜர் சாலையில் வந்தபோது ராணிமேரி கல்லூரி அருகே முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தில் இருந்து ஒரு பை கீழே விழுந்ததை பார்த்துள்ளார். 

உடனடியாக ஆட்டோவில் நிறுத்தி அதை எடுத்து பார்த்தபோது கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது. ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் இருந்தது. அந்த பணப்பையை தவறவிட்ட வாகன ஓட்டி யாரென்பதை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து ஆட்டோ ஓட்டுநர் சுப்ரமணி காவல்நிலையத்தில் பணப்பையை ஒப்படைத்தார். இவரது நேர்மையை பாராட்டி சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் மற்றும் விருது வழங்கி சிறப்பித்தார் .

பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் நாள்தோறும் 12 மணி நேரம் ஓடினாலும் 200 ரூபாய் வீட்டிற்கு எடுத்துச் செல்வதே சவாலாக இருக்கிறது என்று தெரிவித்த ஆட்டோ ஓட்டுநர் சுப்ரமணி கீழே கிடந்த பணத்தை பார்த்ததும் அதை தவறவிட்டவர்கள் அவசர தேவைக்கு எடுத்து சென்றாரோ என்று தெரிவித்தார்.

அந்தப் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்தது பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்று அவர் கூறினார். தனது வறுமையிலும் மற்றவர் பணத்திற்கு ஆசைப்படாத நேர்மையாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநர் சுப்ரமணி நேர்மைக்கு எடுத்துக்காட்டாக உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் பாராட்டினர். 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Feb-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee