உலகம்

விநாயகர் டாலர் அணிந்து மேலாடையின்றி போஸ் கொடுத்த ரிஹானா: கொதித்தெழுந்த நெட்டிசன்ஸ்!!!

பாப் பாடகி ரிஹானா விநாயக கடவுள் உருவம் பொறித்த நெக்லஸூடன் வெளியிட்டுள்ள டாப்லெஸ் போட்டோ பதிவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மும்பை:-

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா மேலாடை இன்றி, கழுத்தில் கடவுள் விநாயகர் டாலர் அணிந்துள்ள படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

அண்மையில் மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்திருந்தார் ரிஹானா. அது உலகளவில் கவனத்தை ஈர்த்தது. அந்த ஒரு ட்வீட்டால் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் எழுந்திருந்தன. 

எங்களது நாட்டு விவகாரங்களில் நீங்கள் தலையிட வேண்டாமென்று பிரபலங்கள் பலர் அவரது கருத்துக்கு பதிலளித்து இருந்தனர். இந்த சூழலில் தான் மேலாடையின்றி விநாயகர் டாலர் அணிந்துள்ள படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

Nudity Warning


“ஜமைக்காவை சேர்ந்த பாப் பாடகர் Popcaan கேட்டுக்கொண்டதற்காக இன்றிரவு மேலாடை இன்றி” என அந்த ட்வீட்டுக்கு கேப்ஷன் போட்டுள்ளார் ரிஹானா. 

இது இந்து கடவுளையும், இந்து மத நம்பிக்கையையும் அவமதிக்கும் செயல் என்று பல தரப்பினரும் அவரது பதிவிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, மஹாராஷ்ராவை சேர்ந்த இஸ்லாமியார் ஒருவர். தனக்கு விநாயகரை மிகவும் பிடிக்கும் என்றும் ரிஹானாவின் இந்த புகைப்படம் எனது உணர்வுகளை மிகவும் காயப்படுத்துகிறது. இதனை ரிஹானா கண்டிப்பாக திரும்ப பெற வேண்டும் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதனிடையே,  “இது இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் செயல்” என சொல்லி டெல்லி மற்றும் மும்பை போலீசாரிடம் அந்த இரண்டு சமூக வலைத்தள கணக்குகள் மீதும் புகார் கொடுத்துள்ளனர்.

இந்திய மக்களையும், இந்துக் கடவுள்களையும் தொடர்ந்து அவமதிக்கும் செயல்களை வெளிநாடுகளில் உள்ள சில பிரபலங்கள் தொடர்ந்து செய்து கண்டனத்திற்கு ஆளாகிறார்கள்.

மேலும், விவசாயிகள் போராட்டம் குறித்த ரிஹானாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள இந்திய அரசியல்வாதிகள், இதற்கும் ஆதரவு தெரிவிப்பரா என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Feb-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee