நாம் நினைப்பது போல் பருவநிலை மாற்றத்தை சமாளிக்க அதிக அளவில் மரம் நடுவது, பூமிக்கு நன்மையைவிட தீமையே விளைவிக்கும் என்று புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
நாம் நினைப்பது போல் பருவநிலை மாற்றத்தை சமாளிக்க அதிக அளவில் மரம் நடுவது, பூமிக்கு நன்மையைவிட தீமையே விளைவிக்கும் என்று புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதலை எதிர்த்துப் போராடுவதற்கு, கார்பன்-டை-ஆக்சைடை ஆக்ஸிஜனாக மாற்றுவதற்கும், புவியை குளிர்ச்சியடையச் செய்வதற்கும் மரங்களை அதிகளவில் வளர்க்க வேண்டும் என்று கூற கேள்விபட்டிருப்போம். இதனால் மரம் நடுவது தொடர் பிரச்சாரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆனால் சமீபத்திய ஆய்வு ஒன்று, புவியில் அடர்த்தியாக மரங்களை வைத்திருப்பது சூரிய ஒளியை அதிக அளவில் உறிஞ்சுவதற்கு வழிவகுக்கிறது என்றும் இது புவியின் வெப்பநிலையை மேலும் மோசமாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி ‘ஆல்பிடோ விளைவு’ என்று அழைக்கப்படுகிறது. ‘ஆல்பிடோ விளைவு’ என்பது ஒரு பொருள் எந்த அளவிற்கு சூரிய ஒளிக்கதிரை பிரதிபலிக்கிறது, எந்த அளவு உட்கிரகிக்கிறது என்பதைக் குறிக்கும்.
அமெரிக்காவின் ஏறத்தாழ நான்கில் ஒரு பங்கு அளவிற்கு மரங்கள் இழப்பு ஏற்பட்ட போது தொடர்ச்சியான நிகர குளிரூட்டலை ஏற்படுத்தியது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். ஏனெனில் ஆல்பிடோ விளைவு கார்பன் விளைவை விட அதிகமாக உள்ளது.
மிசிசிபி ஆற்றின் அருகேயும் பசிபிக் கடற்கரையிலும் ஏற்பட்ட காடுகளின் இழப்பினால், புவி வெப்பமயமாதலுக்கு பங்களித்திருப்பதையும் அவர்கள் கண்டறிந்தனர். அதே நேரத்தில் இன்டர்மவுண்டன் மற்றும் ராக்கி மவுண்டன் வெஸ்டில் காடுகள் இழப்பு, உண்மையில் புவியின் சூட்டை தணிக்க பங்களித்திருக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
"இன்டர்மவுண்டன் வெஸ்ட் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில், கார்பன் மற்றும் ஆல்பிடோ விளைவுகளிலிருந்து முழு காலநிலை தாக்கங்களையும் கருத்தில் கொள்ளும்போது, அதிக காடு உண்மையில் புவி வெப்பநிலை அதிகரிக்க வழிவகுக்கிறது என்பதை நாங்கள் கண்டறிந்தோம்" என்று பேராசிரியர் வில்லியம்ஸ் கூறினார்.
கிரகத்தை குளிர்விக்கும் நோக்கில் காடுகளின் ஆல்பிடோ விளைவை அவற்றின் நன்கு அறியப்பட்ட கார்பன் சேமிப்போடு கருத்தில் கொள்வது முக்கியம், அவர் மேலும் கூறுகிறார்.
கார்பன்-டை-ஆக்ஸைடு குறைவாக உள்ள மண்ணில் நடப்படும் செடிகள், மரங்களாக மாறும்போது, அவை இயற்கையான கரிய அமிலத்தை அதிகப்படுத்தவே செய்வதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால், ஏற்கனவே கரிய அமிலம்த் தன்மை அதிகமாக உள்ள மண்ணில் இந்த மரங்கள் வளரும்போது, அதன் அளவை மரங்கள் குறைக்கின்றன.
புதிய செடிகளை நடுவதன்மூலம், எவ்வளவு இயற்கையான கரியமில அளவை சரிசெய்துவிட முடியும் என்று முன்பு நாம் கொண்டிருந்த அனுமானங்கள் சற்று மிகைப்படுத்தப்பட்டவையாக தெரிவதாக இந்த ஆய்வின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக, காற்றில் இருந்து கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி வளிமண்டலத்தில் கார்பன் அதிகரிப்பதை தடுப்பதில் மரங்கள் திறமையானவை என்றாலும், அவை சில நிலப்பரப்புகளை விடவும் இருண்டவை, இதனால் அவை சூரிய ஒளியை உறிஞ்சுவதற்கும் வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் அதிக வாய்ப்புள்ளது.