அரசியல்

புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக தமிழிசை பதவியேற்பு ..!!!

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதுச்சேரியின் பொறுப்பு துணைநிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்றுக் கொண்டார். புதுச்சேரியின் ஐந்தாவது பெண் துணை நிலை ஆளுநர் ஆக தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்றார். 

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி தமிழிசைக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதுச்சேரி வரலாற்றில் முதல் முறையாக தமிழ் மொழியில் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார் தமிழிசை. கிரண்பேடி நீக்கப்பட்டதை அடுத்து தெலுங்கானா ஆளுநரான தமிழிசை , புதுச்சேரியின் பொறுப்பு ஆளுநராக பதவியேற்று கொண்டார்.

புதுச்சேரி ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்கும் விழாவில் முதல்வர் நாராயணசாமி பங்கேற்றுள்ளார். அத்துடன் சபாநாயகர் சிவக்கொழுந்து, எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் விழாவில் பங்கேற்றுள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த முக்கிய பாஜக நிர்வகிக்கும் விழாவில் பங்கேற்றனர்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Feb-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee