தமிழ்நாடு

மரக்கூண்டை உடைத்து வெளியில் வர முயற்சிக்கும் காட்டு யானை..!!!

முதுமலையில் மரக் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மூன்று பேரை கொன்ற காட்டு யானை சங்கர் ஆக்ரோஷத்துடன் கூட்டை உடைத்து வெளியேற்ற முயன்ற காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

தமிழக கேரள எல்லையில் உள்ள நீலகிரி மாவட்டம் சேரம்பாடி பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை சங்கர் மூன்று பேரைக் கொன்றது.

இதனையடுத்து நீண்டபோராட்டத்திற்குப் பிறகு கடந்த 12ஆம் தேதி மயக்க ஊசி செலுத்தி யானை பிடிக்கப்பட்டது.. பின்னர் முதுமலை புலிகள் காப்பகத்தில் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட மரக் கூண்டில் யானை அடைக்கப்பட்டது

இந்நிலையில் 2 டன் எடையுள்ள மரக்கூகூண்டை உடைத்து வெளியில் வர முயற்சிக்கும் காட்சி இணையத்தில் தீயாய் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

தப்பிக்க முயற்சி செய்ய  யானை சங்கரை அங்கிருந்த பாகன்கள்   சாந்தப்படுத்தினார். மேலும் அடைத்து வைக்கப்பட்டுள்ள மரக்கூகூண்டின்  அனைத்து பகுதிகளிலும் ராஜச கயிறால் கட்டி வைக்கப்பட்டது.. தொடர்ந்து கும்கி யானைகளை வைத்து  வனத்துறையினர் சங்கர் யானையை கண்காணித்து வருகின்றனர்

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Feb-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee