சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முடிந்தது.
இதனை அடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடந்து கொண்டிருக்கிறது.
இதில் 3வது நாள் ஆட்டத்தில் ஜோ ரூட்டுக்கு எல்பிடபிள்யூ கொடுக்காததால், இந்திய அணி கேப்டன் விராட் கோலி நடுவர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதனால் விராட் கோலிக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விராட் கோலிக்கு 2-வது தகுதி குறைப்பு புள்ளிகள் வழங்கப்பட்டால் சிக்கல் ஏற்படும் நிலை எழுந்துள்ளது.